Oct 3, 2010

प्रवीण पाठमाला पाठ 7 से 12 तक तमिल अनुवाद

(सौजन्य राजभाषा विभाग एवं सी डेक)

Lesson 7

நோயாளி : வணக்கம் டாக்டர் ஐயா!
டாக்டர் : வணக்கம், சொல்லுங்கள் உங்களுக்கு என்ன துன்பம்?
நோயாளி : டாக்டர் ஐயா, எனக்குச் சில நாட்களாகக் காய்ச்சல் போல தோன்றுகிறது.

இருமலும் இருக்கிறது.

பசி எடுப்பதில்லை.
எதுவும் சாப்பிடவும் முடிவதில்லை.
டாக்டர் : இப்படி எப்போதிலிருந்து இருக்கிறது?
நோயாளி : கிட்டதட்ட ஒரு மாதமாக.

டாக்டர் : நீங்கள் ஏதேனும் மருந்து சாப்பிச்சீர்களா?

நோயாளி : ஆம், காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டேன்.
டாக்டர் : இது தவறானது.
டாக்டரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் சாப்பிடக்கூடாது.

நோயாளி : சரி, டாக்டர் ஐயா!
ஆனால் இப்போது எனக்கு மிகுந்த பலவீனமாக இருக்கிறது.

எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.
சில நேரங்களில் நெஞ்சும் வலிக்கிறது.
டாக்டர் : உம், காப்ஸ்யூல்கள் தருகிறேன்.

காலை-மாலை உணவுக்குப்பின் சாப்பிடுங்கள்.
சில பரிசோதனைகள் செய்விக்க வேண்டும்.

ரிப்போர்ட் பார்த்த பிறகு தான் சரியான சிகிச்சை நடத்த முடியும்.

நோயாளி : டாக்டர் ஐயா, கவலைப்பட எதுவும் இல்லை.

டாக்டர் ஐயா: இல்லை, கலவரமடைய எதுவும் இல்லை.

ஆனாலும் பரிசோதனைகள் செய்வித்தால் நன்றாக இருக்கும்.

நோயாளி : சரி, டாக்டர் ஐயா!

எந்தெந்த பரிசோதனைகள் செய்விக்க வேண்டும்?

டாக்டர் : நான் எழுதித்தருகிறேன்.

(இரண்டு நாட்களுக்குப் பின்.)

டாக்டர் : சரி

ஆனால் இந்த இரண்டாவது பரிசோதனை செய்யவில்லையா?
இதன் ரிப்போர்ட் இல்லையே.
நோயாளி : இல்லை, டாக்டர் ஐயா.

இந்த பரிசோதனை மிகவும் விலை அதிகமானது.
இவ்வளவு விலை அதிக பரிசோதனை செய்விப்பது எனக்குச் சாத்தியமில்லை.

டாக்டர் : நல்லது, மருந்து சாப்பிட்டதில் ஏதேனும் குணம் கிடைத்தா, சொல்லுங்கள்.

நோயாளி : வலி சற்றுக் குறைந்துள்ளது, ஆனால், பசி எடுப்பதில்லை.

எதுவும் சாப்பிட- குடிக்க முடிவதில்லை.

அதிகமாக நடமாடவும் முடிவதில்லை.

கொஞ்சம் வேலை செய்தாலும் களைப்பு ஏற்படத் தொடர்கிறது.

டாக்டர் : பால் குடியுங்கள்.

பழங்களும், பச்சைக் காய்கறிகளும் சாப்பிடுவதும் அவசியம்.

மேலும் இந்த இரண்டாவது பரிசோதனையும் செய்விக்க வேண்டியது அவசியம்

நோயாளி : டாக்டர் ஐயா, நான் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் பயனாளி.
இந்த பரிசோதனைகளை நான் அரசு மருத்துவமனையில் செய்விக்கலாமா?

மருந்தும் மத்திய அரசு சுகாதாரத்துறை மருத்துவமனையிலேயேகிடைத்துவிடும்.
இதனால் நான் பரிசோதனைக்காக பணம் எதுவும் செலுத்த வேண்டி வராது.
டாக்டர் : சரி

இதற்காக நீங்கள் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் டாக்டரிடம் காண்பிப்பதே சரியாக இருக்கும்.

நோயாளி : நன்றி, டாக்டர் ஐயா! வணக்கம்.

டாக்டர் : வணக்கம்.

 
Lesson 8

 
சுற்றுச்சூழல் சமமின்மையும் பூமியின் உள்ளார்ந்த சலசலப்பும் பயங்கரமாக வெளிப்படும் போது நாம் அதை இயற்கையின் உற்பாதம் என்கிறோம்.
வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம்,எரிமலை மற்றும் புயல் முதலியன இயற்கையின் உற்பாதங்களாக கூறப்படுகின்றன.
இயற்கையின் உற்பாதம் வரும்போது உயிர் மற்றும் பொருள் சேதம் நிரம்ப ஏற்படுகிறது.

போக்குவரத்து மற்றும் செய்தி தொடர்பு சேவைகள் நின்றுவிடுகன்றன, வீடுகள் விழுந்து விடுகன்றன, மக்களுடன் பறவைகள் விலங்குகள் மற்றும் சிறிய புழுபூச்சிகளும் இறந்து விடுகன்றன.

பெருமழை பெய்யும் போது வெள்ளம் வருகிறது.

எங்கெல்லாம் ஆற்று நீர் அபாயக்கோட்டுக்கு மேல் ஓட ஆரம்பிக்கிறதோ, அங்கெல்லாம் பயிர்கள் அழிகின்றன.

அநேக கிராமங்களும்,நகரங்களும்,பேட்டைகளும் மூழ்கிவிடுகன்றன.

மின்சாரம், தண்ணீர் செய்தி தொடர்பு அமைப்புகள் கெடுகின்றன.

இரயில் தண்டவாளங்கள் பெயர்ந்து, இரயில் வண்டிகள் ரத்து செய்யப்படுகின்றன.

வெள்ளத்தின் சீற்றம் ஏற்படும் இடங்களில் எல்லாம் மக்கள் வாழ்க்கை அலங்கோலமாக விடுகின்றது.

கடல் புயலும் ஒரு பெரிய இயற்கை உற்பாதம் தான்.

இதனால் கடற்கரைப் பகுதிகள் அதிகமாகத் தாக்குறுகின்றன.

பெரிய பெரிய கடல் அலைகள் வரும்போது கடற்கரை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.

செய்தி தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைப்பு சீர் கெடுகிறது.

கடலில் புயல் வருவதற்கு முன்பு படகோட்டிகள் மற்றும் மீனவர்களுக்கு கடலில் போகாதிாிருக்கும்படி எச்சரிக்கை வானொலி, தொலைக்காட்சி பொது அறிவிப்பு அல்லது மற்ற மக்கள் ஊடகங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படுகின்றன.

பூமியின் உள்ளார்ந்த சலசலப்பு காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது.

எந்த இடத்தில் பூகம்பம் மையம் கொள்கிறதோ அங்கே அதன் கெடுபயன் அதிகமாகக் காணப்படுகின்றன.

நிலநடுக்கம் ஏற்படும் போது கட்டிங்களிலிருந்தும் அல்லது வீடுகளிலிருந்தும் வெளியேறி திறந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும், ஏனெனில் கட்டிடங்கள், மண்வீடுகள், வீடுகள் முதலியவை வீழ்ந்து விடுகின்றன, பெருமளவில் மக்கள் சேதமடைகிறார்கள்.

உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமிலிருக்க, பூகம்பம் ஏற்படும் இடங்களில் மரத்தாலான அல்லது பூகம்பத் தடுப்பு கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.

எரிமலையில் பூமிக்கு உள்ளேயுள்ள வெப்பமிகுந்்த தீக்குழம்பு வெடித்து வெளியே வரும்போது, கிராமங்கள் அப்படியே சூடான தீக்குழம்பில் அமுங்கி விடுகின்றன.

எரிமலையால் தாக்கமுற்ற இடங்களில் மக்கள் எப்போதும் பயத்திலும், பீதியிலும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

எரிமலையைப் பொறுத்த வரை நம்நாடு மிகவும் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது திருப்தியான செய்தி.

இந்த இயற்கை உற்பாதங்களிலிருந்து மனிதன் தன் முன்னெச்சரிக்கையினால் பெருமளவுக்குத் தப்ப முடியும்.

காடுகள் வெட்டுவதைத் தடுப்பதால் வெள்ளத்தின் இன்னலைக் குறைக்க முடியும்.

நிலநடுக்கத்திலிருந்து தப்புவதற்கு நிலநடுக்கத் தடுப்பான அல்லது மரத்தாலான வீடுகள் கட்டப்பட வேண்டும்.

சுனாமி முதலியவற்றிலிருந்து தப்புவதற்கு கரைகளில் அடர்த்தியான மரம்நடுதல் அவசியமானது.

எங்கெல்லாம் இயற்கை உற்பாதங்கள் ஏற்படுகின்றதோ அஙேகெல்லாம் அரசு தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் விபத்து நிர்வாகத்துக்கு எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ஒரு பக்கம் இயற்கை மனிதனின் நண்பன், அதேசமயம் மறுபக்கம் அது தன் கொடிய உருவத்தில் பகைவனும் ஆகும்.

நாம் இத்தகைய விபத்துகள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

முடிந்தவரையில் நாம் எப்போதும் ஆயத்தமாகவும், விழிப்புடனும் இருக்கவேண்டும், ஏனெனில் விபத்துகள் தன் பின்னால் பல கொடிய நோய்களை அவிழ்த்துவிடாமல் போவதில்லை.

மனிதன் வெற்றி பெற்றவனானாலும் ஒவ்வொரு முரையும் இயற்க்கை அவனுக்குப் புதிய சவால்களை அளிக்கிறது.

ஒவ்வொரு சவாலையும் சமாளிப்பதில் தான் மனிதனின் அடையாளம் அடங்கியுள்ளது. சவால்களை எதிர்க்கொள்ளாமல் ஆபத்துகளிலிருந்து தப்புவது சாத்தியமில்லை.

Lesson 9


அன்பார்ந்த சுதா

வணக்கம்.

இன்று காலையில் எழுந்ததுமே செய்தித்தாளை எடுத்தப்போது அதில் உன் கட்டுரையைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆனால் கட்டுரையைப் படித்தப் பிறகு, எனக்கு உன்னுடைய சில கருத்துக்களுடன் ஒப்புதல் இல்லை என்று தோன்றியது.

இன்று உலகமயமாதலிருந்து அஞ்சுவதோ, தப்புவதோ சரியில்லை.

இன்று எந்த ஒரு நாடும் தனக்குள் சுருங்கிக்கொண்டு இறுக்க முடியாது என்பதை நீயும் ஒப்புக்கொள்வாய்.

இந்தியா சுதந்திரமடைந்த போது நாம் பொருளாதார நோக்கில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருந்தோம் என்பதை எண்ணிப் பார்.

உயர்ந்த தொழில்நுட்பம் இன்றி நம்முடைய தொழில்கள் பின்பட்டு இருந்தன.

சுதந்திரதுக்குப் பிறகு நம் தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது, வெளிநாட்டு இறக்குமதியியின் மீது தடை விதிக்கப்பட்டது.

இப்படி இருந்தும் கூட நமது பொருளாதார நிலையில் குறிப்படத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

கடந்த சில வருடங்களில் உலகமயமாதலின் தாக்கத்தினால் எத்தனைப் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதோ, அத்தனை முன்னேற்றம் சுதந்திரத்துக்குப் பிந்தைய அரைநூற்றாண்டில் கூட ஏற்படவில்லை.

இப்போது நாட்டில் நாற்புறமும் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிற

உலகமயமாதலினால் எத்தனை பயன்களோ அவற்றில் முக்கியமானவை -அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் கொடுக்கல்-வாங்கல்.

அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் எத்தனைக்கெத்தனை கொடுக்கல்-வாங்கல் நிகழுமோ, இந்தியா போன்ற வளர்ச்சியுறும் நாடுகளுக்கு அத்தனைக்கெத்தனை பயன் விளையும்.

கச்சாப்பொருள்கள் அதிகம் கொண்ட வளர்ச்சியுறும் நாடுகளில், புதிய தொழில்கள்நிறுவப்படமுடியும்.

எத்தனைப் புதுப்புது தொழில்கள் தொடங்கப்படுமோ அத்தனைப் புதுப்புது வேலை வாய்ப்புகள் பெருகும்.

நாட்டில் வேலையின்மைக் குறையும்.

உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும்.

ஏற்றுமதி - இறக்குமதியின் பேரில் கட்டுப்பாடு எந்த அளவுக்குக் குறையுமோ அந்த அளவுக்கு நாட்டின் தொழில்களுக்கு பயன் கிடைக்கும், ஏனென்றால் கச்சாப் பொருள் எங்கிருந்து கிடைக்குமோ நாம் அதனை அங்கிருந்து வாங்குவோம், ஆயத்தம் செய்த சரக்குகள் எங்கே நல்ல விளக்கு விற்குமோ, அங்கே அவற்றை விற்போம்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெருமளவு லாபம் ஈட்டவும் நாம் கச்சாப்பொருள் வாங்கவும்,ஆயத்தம் சரக்குகளை வேண்டி நமது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே போகத்தான் வேண்டியிருக்கும்.

உலகமயமாதல் இதில் உதவிகரமாகத் தான் இருக்கும், பாதகமாக இருக்காது.

உலகமயமாதலின் லாப-நட்டங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் தான் அதிகமாகச் சிந்திக்கமுடியும். ஆனால், நம்முடைய தொழில் முன்னேற்றத்தினால் நம் உற்பத்தியும் ஏற்றுமதியும் வளரவளர இந்தியர்களாகிய நம் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன்.

நமக்கு இன்று எத்தனை வசதிகள் கிடைத்துள்ளனவோ அவ்வளவு முன்பு எப்போதும் இருந்ததில்லை.

உலகமயமாதல் செயற்பாங்கில் இந்தியா ஒரு புதிய பொருளாதார சக்தியாக உயர்ந்து வருகிறது என்று நான் நம்புகிறேன்.

உலகமயமாதலின் விளைவுகள் குறித்து முன்பு எம்மாதிரி மக்களின் நினைப்பு இருந்ததோ, அவ்வளவு இப்போது இல்லை.

உன் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

பணிவுடன்

உன் , உமா

திருமதி சுதா

துணை இயக்குனர்

சுற்றுச்சூழல் மற்றும் வனஅமைச்சகம்

புதுதில்லி



Lesson 10

கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,738 மீட்டர் உயரத்தில் காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்கில் ஜேலம் நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய நகரம் சீநகர் என்று அழைக்கப்படுகிறது.
பரந்த டால் ஏரி சீநகரின் முக்கியமான கவர்ச்சியாகும்.

ஏரியில் ஒன்றை விட ஒன்று அழகான படகு வீடுகள் உள்ளன.

இவற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு வீட்டில் இருப்பது போன்ற எல்லா வசதிகளும் கிடைக்கின்றன.
சிறிய உருவிலான நீண்ட படகுகளை ஷிகாரா என்கிறார்கள்.

இவற்றில் வியாபாரிகள் பொருள்களைக் கொண்டு வந்து விற்கிறார்கள், சுற்றுலாப் பயணிகள் படகு சவாரியின் உல்லாசத்தை அனுபவிக்கிறார்கள்.

வண்ண வண்ணமான பூக்கள், காய்கறிகள் மற்றும் விதவிதமான பொருள்களை ஏற்றிக் கொண்டு ஷிகாராக்கள் டால் ஏரியில் மிதக்கின்றன.

ஏரியில் மிதக்கும் ஷிகாராக்கள் மிக அழகாகத் தெரிகின்றன.

டால் ஏரியின் கிழக்குக்கரையில் இமாலயத்தின் மலையடிவாரத்தில் முகலாயச் சக்கரவர்த்திகளின் காலத்து சஷ்மே ஷாஹி, நிஷாத் மற்றும் ,ஷாலிமார் பூங்காக்கள் பள்ளத்தாக்கின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

பூங்காக்களில் விளையாடும் குழந்தைகள் சுற்றி நடக்கும் இளம் ஆண்கள்-பெண்கள், மற்றும் பூங்காக்களை வட்டமிடும் வண்டுகள் சுற்றுலாப் சுற்றுலாப்பயணிகளின் மனத்தை மோகிக்கச் செய்கின்றன.

டால் ஏரியின் நடுவே நிற்கும் நான்கு கினார் மரங்கள் மனதைக் கொள்ளைக் கொள்கின்றன.

டால் ஏரியின் மேற்குக்கரையில் ஒருபக்கம் ஹஸரத்பல் மசூதி இருக்க, மறுபக்கம் ஹரிபர்வதத்தின் சிகரத்தில் சீசஹ்கராச்சாரியாரின் பிரசித்திப் பெற்ற கோவில் உள்ளது.

சீநகர் சுற்றுலாவுக்கு மட்டுமல்ல, கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்றது.
இது மரம் மற்றும் பாத்திரங்களில் செதுக்குவேலை,துணிகள் மீது காஷ்மீரத்துப் பூவேலை மற்றும் கம்பளி நெசவுக்கும் பிரசித்தி வாய்ந்தது.

இங்குள்ள பஷ்மீனா மற்றும் தோஷா சால்வைகள் உலகப் பிரசித்திப்பெற்றவை.

பேப்பர் மேஷ்யும் காஷ்மீரத்தின் சிறப்பான கைத்தொழில்.

இங்கு அதிகமான குளிர் விழுகிறது, சில சமயங்களில் வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழேசென்று விடுவதுண்டு.

அப்போது டால் ஏரியும் பனி மூடிய திடலாகி விடுகிறது.உறைந்த இந்த பனியின் மீது சுற்றுலாப்பயணிகளும் குழந்தைகளும் பலவிதமான விளையாட்டுகள் ஆடி மகிழ்கிறார்கள்.

குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கம்பளியாலான லபாதா(நீண்ட அங்கி) அணிகின்றனர், இதை காஷ்மீரி மொழியில் ஃபிரன் என்கிறார்கள்.

மக்கள் இதன் கீழே 'காங்கடி'(நெருப்புக்கட்டி)யை வைத்திருக்கிறார்கள், இதனால்அவர்களுக்குச் சூடு கிடைக்கிறது.

இங்குள்ள மக்கள் உழைப்பாளிகளும் நேசமிக்கவர்களும் ஆவார்கள்.

கஷ்மீரப் பள்ளத்தாக்கலில் ஈடற்ற அழகில் சொக்கிப்போய் ஃபிர்தோஸ் கூறினார் இந்த தரணியில் எங்காவது சொர்க்கம் இருக்குமானால் அது இங்கே தான்,இங்கேதான்,ஆம்.இங்கே தான். இந்த வாக்கியத்தைப் பின்னர் ஜஹாங்கிரும் தில்லியின் செங்கோட்டைக்காக மீண்டும் கூறினார்.



Lesson 11

ஒரு நாள் கிராமத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து நான் ரெயில் வண்டியைப் பிடித்து தில்லியை அடைந்தேன்.

ரெயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே என்னை ஆட்டோ-ரிக்ஷாக்காரர்களும் டாக்ஸிகாரர்களும் சூழந்து கொண்டனர்.

என்னை புதிதாக வந்தவன்் என்று நினைத்து எல்லோரும்ஒரே குரலில் கேட்டார்கள், ''எங்கேபோகவேண்டும்,ஐயா?”

அவர்களிடமிருந்து தப்புவதற்கு நான் சீக்கிரமே ஒரு ஆட்டோ பிடித்து, என் சிற்றப்பாவின் வீட்டைச் சென்றடைந்தேன்.

வீட்டை அடைந்ததுமே திண்ணையில் அமர்ந்திருந்த சிற்றப்பாவைக் கண்டேன்.
கனியாய், வருத்தமுடன்(யாரையோ) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் வணக்கம் தெரிவித்தபோது அவர் என்னை ஆசீர்வாதம் செய்தார், அருகில் உட்கார வைத்து கிராமத்து நிலைமைகளைக் கேட்டார்.

நான் சிற்றப்பாவுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தும் கூட, வீட்டிலுள்ளவர்கள் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர், குழந்தைகள் தொலைக்காட்சியில் கண்களை நட்டுப் பார்த்திருந்தனர்.
மாலையில் என்னுடைய சிற்றப்பா மகன் ஸந்தீப் அலுவலகத்திலிருந்து வந்தான்.

சிறிது நேரம் வரையிலும் நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம்.

இரவில் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம்.

காலையில் நான் என் சகோதரனுடன் உலவப் போய்விட்டேன்.

நகரங்களில் பூங்காக்கள் தான் புத்தம்புதிய காற்றில் மூச்சு வாங்க எஞ்சியுள்ளன.

திரும்பி வரும்போது சகோதரன், நகரங்களில் வேலைப் பார்க்கும் மக்கள் கஷ்டப்பட்டுத்தான் ஜீவனம் நடத்துகிறார்கள் என்று கூறினான்.

மின்சாரம், தண்ணீர்,வீட்டுவாடகை,தொலைபேசி,செய்தித்தாள்,உணவுப் பொருள்கள் முதலியவற்றின் விலைகள் தினமும் அதிகரித்து வருகின்றன.

இங்கே எல்லோரும் தன்னலம் கருதுபவர்களாக இருக்கின்றனர். ஒரு அயலான் இன்னொரு அயலானை அறிவதேயில்லை.

நடந்துவிட்டு வந்ததுமே அண்ணி எல்லோருக்கும் தேநீர் தந்தாள், என்னைப் பார்த்துக் கேட்டாள், அண்ணா, கிராமத்தில் நீங்கள் காலை நேரத்தில் பால் குடிப்பீர்கள், ஆனால் இங்கே எங்களுக்கு தேநீர் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

உங்களுக்கு பால் கொண்டு வரட்டுமா அல்லது எங்களுடன் தேநீர் குடிப்பீர்களா?

நானும் தேநீருக்காக ' சரி' என்றேன்.

அதன் பிறகு எல்லோரும் தயாராகி அவரவர் வேலைகளுக்குச் சென்றனர்.

அன்று நான் வீீட்டிலேயே சிற்றப்பாவுடன் பொழுதைக் கழித்தேன்.

மறுநாள் நான் சகோதரனுடன் நகரம் சுற்றிப் பார்க்கச் சென்றேன்.

போய்க்கொண்டிருக்கும் போது நான் உயர்ந்த கட்டிடங்கள்,பெரிய சினிமா அரங்குகள், ஊட்டம் நிறைந்த கடை வீதிகள், பெரிய வணிக வளாகங்கள், அகலமான கருஞ்சாலைகளில் ஓடும் பேருந்துகள்,கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைக் கண்டேன்.

இந்த வணிக வளாகங்களில் நான் பலதரப்பட்ட பொருள்கள் கொண்ட பெரியபெரிய காட்சியறைகளைக் கண்டேன்.

தானியங்கி படிகளில் மேலே போகும் போது எனக்கு பயமாகவும் இருந்தது.ஆனால், எனக்கு இந்த அனுபவம் புல்லரிப்பு ஏற்படும் படியாக இருந்தது.

இந்த 'மால்களில் டீ-காபி அருந்திக்கொண்டும்,பேசிக்கொண்டும்இரைச்சல் போட்டுக்கொண்டும் மக்கள் காணப்பட்டனர்.
பிஜ்ஜா,பர்கர்,ஸேன்ட்விச்,சௌமீன் சாப்பிடும்இளைஞர்களும்,இளம் பெண்களும் தனியாகக் காணப்பட்டனர்.

பொருள்கள் வாங்கியதும் சிலர் ரூபாய்க்கு பதிலாக கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தவதையும் நான் கண்டேன்.

எனக்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது.

நான் என் சகோதரனுடன் பிஜ்ஜா மற்றும் காபியைச் சுவைத்தேன்.

திரும்பி வரும்போது நாங்கள் மெட்ரோ ரெயிலும் பயணித்தோம்.

மெட்ரோவில் பயணம் செய்வது இது எனக்கு முதல் அனுபவம்.

மெட்ரோவில் நிறைய கூட்டம் இருந்தது.

தில்லி நகரின் ஓட்டம்-பரபரப்பு நிறைந்த வாழ்க்கையைக் கண்டு, இதனால் தான் நகர மக்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள்.பலவிதமான நோய்களுக்கும் இரையாகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது.

வீட்டு பிரச்சனைகள், அலுவலகப் பணிகள்,பேருந்துகளில் கூட்டம்,மாசடைந்த காற்று இவையெல்லாம் நகரவாழ்க்கையைக் கடினமானதாகச் செய்கின்றன.

இத்தனைக் கஷ்டங்கள் இருந்தும் கூட மக்கள் நகரத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.ஏனென்றால் வேலை வாய்ப்புகள் நகரங்களில் தான் அதிகம்.

ஆனால் என் மனம் இங்கே ஈடுபடவில்லை.

நான் இரண்டு நாட்களிலேயே என்னுடைய கிராமத்தின் திறந்த வெளியில், இயற்கையின் மடிக்கு திரும்பி வந்தேன்.

நகர வாழ்க்கை எனக்கும் பிடித்தமாக இல்லை.

என் மனம் கிராமத்தில் தான் களிப்படைகிறது.



Lesson 12

ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார மனிதன் வசித்து வந்தான்.

அவனுடைய வீட்டில் ஒரு மகன் பிறந்தான்.

அந்த பணக்காரன் அவனுக்கு'அமர்' என்று பெயர் வைத்தான்.

மகன் பெரியவனாகி நல்ல காரியங்கள் செய்து தன் பெயரை இறவாதாதகச் செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பம்.
பெரியவனனாதும் அமருக்குத் தன் தந்தையின் விருப்பம் தெரிய வந்தது.

எல்லோரும் தன் பெயரை அறியும்படி செய்யும் செயலை ஏன் செய்யக்கூடாது என்று அவன் எண்ணமிட்டான்.

அமரின் வயல்களுக்குப் பக்கத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அவன் மணலைத் திரட்டி அதில் தன் பெயரை எழுதினான்.

(அவ்வழி) வந்து போகும் மக்கள் அவன் பெயரைப் படித்தனர்.

தன் பெயரை நூற்றுக்கணக்கான மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர் என்று அமர் மகிழ்ச்சியடைந்தான்.

ஒரு நாள் மாலையில் காற்று வேகமாக வீசி மணலை அடித்துக் கொண்டு போனது.

மணல் பறந்ததுமே அமரின் பெயரும் மறைந்தது.

ஒரு நாள் அவன் தன் பெயரை மரத்தின் தண்டு மேலுள்ள பட்டை மீது எழுதினான்.

இங்கிருந்து தன் பெயர் எளிதாக அழிந்துவிடாது என்று அவன் எண்ணினான்.

ஒரு நாள் துரதிருஷ்டவசமாக புயல்காற்று வீசியது,மரத்தின் தண்டு உடைந்து விட்டது.

பாவம், அமரின் பெயரை இறவாதாதகச் செய்யும் கனவு சிதறியது.

அடுத்த தடவை அவன் யாரும் காணாமல் தன் பெயரை ஒரு புராதனக் கட்டிடத்தின் சுவரில் எழுதினான்.

அந்த புராதனக் கட்டிடத்தைக் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் பல பயணிகள் வந்தனர்.

இப்போது தன் பெயர் ஊர் உலகம் எங்கும் பரவி விடும் என்று அமர் எண்ணினான்.

ஒரு நாள் துரதிருஷ்டவசமாக பெருமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

கட்டிடம் பழைமையானது.

அதன் சுவர் விழுந்து விட்டது.

சுவர் விழுந்ததுமே அமரின் பெயரும் மண்ணோடு மண்ணாக கலந்தது.

அமருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

அவன் தன் பெயரை, அழிந்து போகாத ஓரிடத்தில் எழுதி வைக்க எண்ணினான்.

கிராமத்துக்குப் பக்கத்தில் ஒரு நதி இருந்தது.

நதி ஒரு பாறையின் கீழே ஓடியது.

அங்கே ஒரு குகை இருந்தது.

குகையில் புராதானமான உருவச்சிலைகள் மற்றும் சுவர்ச்சித்திரங்கள் இருந்தன.

ஊர் உலகம் எங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கே வந்தனர்.

அமர் ஒருநாள் காலை நேரத்தில் அங்கே சென்றான்.

அவன் உளியைக் கொண்டு தன் பெயரை பாறை மீது செதுக்கினான்.

பெயரை செதுக்கும் போதே, இனிமேல் தன் பெயர் ஊர் உலகமெங்கும் இறவாது நிற்கும் என்று எண்ணினான்.

இங்கு அவன் பெயர் அழியாமல் இருக்கும், ஆனால் ஒரு நாள் வானத்தில் கர்ஜித்துக் கொண்டு கறுத்திரண்ட மேகங்கள் வந்தன, வெகுதூரம் வரை பெய்த மழையில் அப்பகுதியில் பயங்கரமான வெள்ளம் வந்தது.

வெள்ளம் வந்ததுமே ஆற்றின் ஓட்டம் தீவிரமானது, பாறைகளும் அடித்துச் செல்லப்பட்டன.

பாவம் அமரின் பெயர் பாறையுடன் வெள்ளத்தில் அடித்துச் சென்றது.

அவன் பெயர் இறவாதிருக்கும்படி செய்யும் கனவு நொறுங்கி போனது.

அப்போது அமரின் கிராமத்தில் ஒரு துறவி வந்திருந்தார்.

கிராமத்து மக்கள் அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை துறவியிடம் அடைக்கலமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

அமருக்கும் இது நல்ல வாய்ப்பாக இருந்தது.

துறவி அவன் பெயரை இறவாமலிருக்கச் செய்ய ஏதேனும் வழி நிச்சயம் தெரிவிப்பார் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது.

அமரும் அவரிடம் அடைக்காலமாகச் சென்றான், தன் பெயரை இறவாமலிருக்கச் செய்யும் வழியைக் கேட்டான்.

அதோடுகூட, அவன் தான் செய்த பிரயத்தனங்கள் பற்றியும் தெரிவித்தான்.

அமர் கூறியதைக் கேட்டு துறவி மெல்லப் புன்னகைத்தார்.

துறவி இனிமையான குரலில் அன்புடன் கூறினார்-'குழந்தாய், உன் பெயரை இறவாததாக செய்யவேண்டுமானால், அதை மண் அல்லது கல் மீது அல்ல, மக்ளின் இதயத்தில் எழுது'.

செல், மக்கள் உன் பெயரை நினைவில் வைத்திருக்கும்படியான செயல்களைச் செய்.

இதைக் கேட்டதும் அவன் தந் பெயரை இறவாதாகச் செய்வது குறித்து யோசனை செய்யத் தொடங்கினான்.

திடீரென அவன் மகிழ்ச்சியால் பூரிப்படைந்தான்.

அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்-ஆம், இந்த வழியே உச்சிதமானது.

மக்கள் சேவை மற்றும் நன்மை செய்வதால் தான் பெயர் இறவாததாக ஆகமுடியும் என்று அவனுக்குத் தெரிந்தது.

பிறகு அவன் மக்கள் சேவை செய்ய சபதம் எடுத்தான்.

இதற்காக அவன் தன் வீட்டை ஆசிரமமாக மாற்றினான், தன் முழு வாழ்க்கையையும் மக்கள் சேவையிலேயே ஈடுபடுத்தினான்.

அவனுடைய வீடு'அமர் ஆசிரமம் என்று பிரசித்தி பெற்றது, இவ்வாறாக அமரின் பெயர் இறவாதாக ஆகும் கனவு நனவாகியது.

No comments:

Post a Comment