Sep 17, 2010

प्रवीण पाठमाला पाठ 3 से 6 तक का तमिल अनुवाद

(सौजन्य राजभाषा विभाग एवं सी डेक)

Lesson 3

மோகினி : ஓ, பிரசாந்த் நீ இன்றும் மிகவும் கவலையுடன் காணப்படுகிறாயே.

ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் கூறு.

ஒருவேளை நான் சற்று உதவி செய்யமுடியும்.

பிரசாந்த் : ஆம், அம்மணி.

நான் ரூ.25,000/- செலுத்தி, நகர வீட்டு வசதி வளர்ச்சி ஆணைக்குழுவின் கீழ் ஒரு அடுக்கு வீடு வாங்க விண்ணப்பம் செய்திருந்தேன்.இப்போது என் பெயர் அந்தக் குலுக்கலில் வந்துள்ளது.


அடுக்கு வீடு ஒப்பளிக்கப்பட்டது, ஆனால்...

மோகினி : இது மகிழ்ச்சிகரமான செய்தி, மிகமிகப் பாராட்டுகள்!

ஆனால் நீ ஏன் இவ்வளவு கவலையுடன் இருக்கிறாய் ?

பிரசாந்த் : என் கவலைக்குக் காரணம் பணம் தான்.

இவ்வளவு பணத்துக்கு ஏற்பாடு எப்படி செய்வது?

மோகினி : இந்த அடுக்கு வீட்டின் (ஃப்ளேட்) மொத்தவிலை எவ்வளவு?

பிரசாந்த் : இந்த வீட்டை வாங்குவதற்கு எனக்கு பத்து லட்சரூபாய் வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால், நான் மூன்று மாதத்துக்குள் பணத்துக்கு ஏற்பாடு செய்யமுடியாவிட்டால் என்னுடைய பதிவாக்கம் ரத்தாகி விடும்.

வீடு வாங்கும் வாய்ப்பு அடிக்கடி எங்கே கிடைக்கப் போகிறது?

மோகினி : நீ உன் அலுவலகத்தில் வீடு கட்டும் திட்ட முன் பணத்துக்காக விண்ணப்பம் கொடுத்திருப்பாய்.

பிரசாந்த் : ஆம், நான் முன்னமயே தெரிவிருத்திருந்தேன்.

இப்போது குலுக்கல் விழுந்ததும் நான் கடன் கோரி விண்ணப்பமும் செய்துள்ளேன்.

கடன், நேரத்தில் கிடைக்கவிட்டால் எனக்கு சிக்கல் ஏற்படும்.

மோகினி : அலுவலகம் கடன் தந்தால் எவ்வளவு தரும்?

பிரசாந்த் : எனக்கு ஐம்பது மாத அடிப்படைச் சம்பளத்துக்கு நிகரான ,கடன் கிடைக்கலாம் அது ஏறத்தாழ ஐந்து லட்சம் இருக்கும்.

மோகினி : மீதித் தொகைக்கான ஏற்பாட்டாய் நீ எங்கிருந்து செய்வாய்?

நீ கூட்டுறவுக்கடன் வழங்கும் சங்கத்தின் உறுப்பினர் என்றால் கிட்டதட்ட லட்சரூபாய் வரையிலும் கடன் அங்கிருந்து கிடைக்கக்கூடும்.

பிரசாந்த் : ஆம், எனக்கு கூட்டுறவுக்கடன் வழங்கும் சங்கத்தின் சரியான நேரத்துக்கு கடன் கிடைக்காவிட்டால் வங்கி அல்லது ஏதேனும் தனியார் நிதிக் குழுமங்களிலிருந்து கடன் வாங்க முடியும்.

மோகினி : உன் அரசாங்கப் பணிக்கலாம் பதினைந்து வருடமாகும்.

நீ விரும்பினால் பொது வருங்கால வைப்பு நிதியிருந்து தொண்ணூறு சதவிதம் வரையிலும் இறுதியாக திரும்ப முடியும்.

பிரசாந்த் : பொது வருங்கால வைப்பு நிதியிருந்து எனக்கு ஏறத்தாழ மூன்று லட்சரூபாய் கிடைக்கக்கலாம்.

மோகினி : உன்னிடம் சொந்த சேமிப்பு அல்லது சில பங்குகள் இருந்தால் வீடு வாங்குவதற்கு அவற்றையும் பயன்படுத்தலாம்.

பிரசாந்த் : ஆம், இந்த அனைத்து வழிவகைகளிலிருந்தும் ஐந்து-ஆறு லட்சரூபாய் கிடைத்துவிடும்.

அலுவலகத்திலிருந்து கடன் கிடைப்பதில் தாமதம் நேரிட்டால் வீடு வாங்கும் திட்டம்முழுதும் பாழாகிவிடும்.

மோகினி : ஆனால் நீ நிராசை அடையவேண்டாம் ஒரு வழி இன்னும் இருக்கிறது.

முழுத் தொகைக்கு ஏற்பாடு செய்ய முடியாவிட்டால், நீ தவணைமுறையிலும் வீடு வாங்கமுடியும்.

பிரசாந்த் : இல்லை அம்மணி, என்னுடைய இந்த வீட்டின் ஒதுக்கீடு ரொக்கம் தந்து வாங்கும் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது. அதனால் இதைத் தவணை முறையாக மாற்றமுடியாது.

மோகினி : அப்படியானால் கஷ்டம் தான். ஆனால் உனக்கக் கடன் கிடைத்துவிடும் என்று எனக்கு தோன்றுகிறது.

Lesson 4

சுற்றுலாப்பயணி : வணக்கம் ஐயா!

சுற்றுலாமுகவர் : வணக்கம்.வாருங்கள், உட்காருங்கள்.சொல்லுங்கள், என்ன தகவல் வேண்டும்?

சுற்றுலாப்பயணி : ஐயா, நான் என் குடும்பத்துடன் தென்னந்தியப் பயணம் செய்ய விரும்புகிறேன்

அதற்காக உங்களிடமிருந்து சில தகவல்கள் வேண்டும்.

சுற்றுலாமுகவர் : நிச்சயம் கிடைக்கும்.

தயவுசெய்து சொல்லுங்கள் உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்?

சுற்றுலாப்பயணி : நாங்கள் ஐந்து பேர்.நான், என் மனைவி, தாயார், தந்தையார் மற்றும் மகன்.

சுற்றுலாமுகவர் : நீங்கள் எத்தனை பயணத்தில் செல்ல விரும்புகிறீர்கள்?

சுற்றுலாப்பயணி : நல்ல பயணத் திட்டமாக இருந்தால் 15 நாள் பயணத்தில் செல்ல விரும்புவோம்.

பயணமுகவர் : தென்னந்தியா கோவில்களுக்கும் பெயர் பெற்றது.

நீங்கள் தென்னந்தியாவில் எங்கெங்கே போக விரும்புகிறீர்கள்?

சுற்றுலாப்பயணி : நாங்கள் தென்னந்தியாவில் மைசூர், சென்னை,மதுரை மற்றும் கன்னியாகுமரி சுற்றிப் பார்க்க விரும்புகிறோம்.

சுற்றுலாமுகவர் : என் யோசனை என்னவென்றால் நீங்கள் மைசூர் செல்கிறீர்களானால் வழியில் பெங்களூரில் இறங்குகள்.

பெங்களூர் மிகவும் அழகான நகரம்.

நீங்கள் ஒரு நாள் பெங்களூரைச் சுற்றிப் பாருங்கள்

பிறகு மைசூர் செல்லுங்கள்.

மைசூர் மன்னர் அரண்மனை, திப்பு சுல்தான் கோட்டை,பிருந்தாவன் பூங்கா முதலிய காணவேண்டிய இடங்கள் உள்ளன.

மைசூரிலிருந்து நீங்கள் சென்னை செல்லுங்கள்.

சென்னைக்கு அருகில் மகாபலிபுரம், காஞ்சிபுரம் பார்க்கலாம்.

நீங்கள் விரும்பினால் சென்னையிலிருந்து நேராகக் கன்னியாகுமரி செல்லுங்கள்.

அங்கிருந்து திரும்பும் போது மதுரையும், கொடைக்கானலும் பார்க்கலாம்.

நல்லது, நீங்கள் இரயிலில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது பேருந்திலா சொல்லுங்கள்.

சுற்றுலாப்பயணி : பயணத் திட்டம் நிச்சயமானால் இரயிலில் பயணம் செய்ய விரும்புவேன்.

சுற்றுலாமுகவர் : உங்களுக்கு ஓட்டல் வசதி வேண்டுமா?

நீங்கள் எங்கே தங்குவீர்கள்?

சுற்றுலாப்பயணி : ஆம், ஓட்டலும் வேண்டியிருக்கும்.

சுற்றுலாமுகவர் : தென்னந்தியாவில் ஓட்டல்கள் மிக மலிவானவை, நன்றாகவும் இருக்கும்.

சுற்றுலாப்பயணி : இரயிலில் பயணம் செய்தால் பயணக்கட்டணம் எவ்வளவு ஆகும்?

சுற்றுலாமுகவர் : இரயிலில் பயணம் செய்தால் ஏ.சி.இரண்டாவது வகுப்புக் கட்டணம் கிட்டதட்ட நாற்பதாயிரம் ரூபாய் ஆகும்.

சுற்றுலாப்பயணி : தகவலுக்கு நன்றி.

திட்டம் முடிவானால் ஒரிரு நாட்களில் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.

Lesson 5

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.

மக்களாட்சியில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தாமே தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் ஐந்தாண்டுக்கொரு முறை நாடாளுமன்ரத்துக்கும் சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் நடத்துகிறது.

இந்தியாவின் தேர்தல் ஆணையம் ஒரு சட்டமுறை நிறுவனமாகும்.

இது நாட்டில் சுதந்திரமான பாரபட்சமற்ற தேர்தலை உறுதிப்படுத்துகிறது.

தேர்தல் செயற்பாங்கின் போது தேர்தல் ஆணையத்தினால் நாடு முழுவதுக்கும் தேர்தல் தேதிகள் பற்றி அறிவிப்புச் செய்யப்படுகிறது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்படுகிறது. அவற்றின் தேர்தல் அறிவிக்கைகள் வெளியாக தொடங்குகின்றன.

நாடெங்கும் தேர்தல் நடவடிக்கைகள் துரிதமாகி விடுகின்றன.

சுவரொட்டிகள், கோஷங்கள், வேண்டுகோள்கள் முதலியன அச்சடிக்கப்பட தொடங்குகின்றன.

டிக்கட் கொடுக்க, வேட்பாளர்களின் பெயர்கள்ப் பரிசீலனை செய்யப்படுகிறது.

சிறிதும் பெரிதுமான தலைவரிகளின் பெரிய,பெரிய கட்-அவுட்கள் வைக்கப்படுகின்றன.

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் வெள்ளம் போல் ஏற்படுகின்றன.

வாக்காளர்களைக் கவர புதுபுதுத் திட்டங்கள் உருவாகின்றன.

அவர்களை ஈர்த்து தேர்தலில் வெற்றி பெறும் உத்திகள் தேடப்படுகின்றன.

தினமும் புதுபுது விவகாரங்கள் எழுப்பப்படுகின்றன.

கூட்டங்களிலும் பேரணிகளிலும் கூட்டம் குறைவானால் சினிமா நடிகர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

சில இடங்களில் பிரபலமான நடிகர்கள் தாமே தேர்தலில் இறங்கிவிடுகிறார்கள்.

சில இடங்களில் அரசியலை, குற்ற செயல்களுக்கு உட்படுத்த முயற்சிகளும் காணப்படுகின்றன.

தேர்தல் ஆணையமும் நாட்டின் மாண்புமிகு நீதிமன்றங்களும் இவற்றை அறியாமலில்லை.

இந்தப் போக்கைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

ஜனநாயகத்தில் வாக்களிப்பு குடிமக்களின் புனிதமான கடமை.

விழிப்புள்ள குடிமக்கள் என்ற நிலையில் நாம் நமது வாக்குரிமையை நன்கு யோசித்துப் பயன்படுத்தவேண்டும்.

வாக்குளிக்கும் போது மதம்,ஜாதி மற்றும் வொழி இவற்றைக் கவனிக்காமல் செயல்திறன் கொண்ட நாணயமான வேட்பாளருக்கே வாக்களிக்கக்வேண்டும்.

உண்மையில் இத்தகைய வேட்பாளர் தான் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

இந்தியாவுக்கு நல்ல தலைமை கிடைத்து இந்திய ஜனநாயகம் வலுப்படும் பொருட்டு வாக்களிப்பவர் என்தவிதமான வற்புறுத்தலும் இன்றி தன்னுடைய வாக்குரிமையைப்பயன்படுத்தவேண்டும்.

Lesson 6

என் சகோதரன் பி.ஏ முடித்துவிட்டான்.

அவன் சுருக்கெழுத்தும் கணினியில் வேலை செய்வதும் கற்றுக் கொண்டுவிட்டான்.

ஏதேனும் அரசாங்கப்பணி கிடைத்தால் நான்றாக இருக்கும் என்று அவன் விரும்புகிறான.

சென்ற வாரம் எங்கள் சிற்றப்பா தில்லியிலிருந்து வந்தார்.

அவர் தில்லியில் மத்திய அரசுச் செயலகத்தில் நிதி ஆலோசகராக இருக்கிறார்.

உரையாடலுக்கு இடையே மனோகர்் அவரிடம் கூறினான்,'சிற்றப்பா, நீங்கள் தில்லிதிரும்பும்போது நானும் உங்களுடன் வருகிறேன். எனக்கு ஏதாவது அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தாருங்கள்.

சிற்றப்பா விளக்கமளித்தார், மகனே, நீ என்னுடன் வரலாம்.சித்தியும் உன்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைவாள், ஆனால் அரசாங்க வேலைக் கிடைப்பது எளிதல்ல.ஏனென்றால், அரசு அலுவலகங்களில் நியமனத்துக்காக ஒரு குறிப்பிட்ட செயல்முறை உள்ளது.

மத்தியப் பொதுப்பணித் தேர்வு ஆணையமும்,பணியாளர் தேர்வு ஆணையமும் அரசுப்பணிகளுக்கு ஊழியர் தேர்வுக்காகப் போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன.

எழுதுமுறைத் தேர்வுகளில் வெற்றிப்பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கும் பிறகு வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

பல்வேறு அரசு அலுவலகங்களின் தேவைக்கு ஏற்ப, இதை இரண்டு ஆணையங்களும் அவ்வப்போது காலியாகும் பதவிகளுக்கும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வுசெய்கின்றன.

இதேபோல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசு பொதுப்பணி ஆணையம் ,மூலமாக அரசுப் பதவிகளில் ஆளெடுப்புக்காகப் போட்டி தேர்வுகள் நடத்துப்படுகின்றன.

போட்டி தேர்வுகள் நடத்துவதற்கு முன்பு வெவ்வேறு அலுவலகங்கள் காலியிடங்கள் பற்றிய பட்டியலை இந்த ஆணையங்களுக்குத் தருகின்றன.

பல்வேறு அலுவலகங்கள் சில சமயங்்களில் வேற்றுப்பணிக்கான பதவிகளில் அமர்த்தப்பட, வேலைவாய்ப்புச் செய்தித்தாளில் (ரோஜ்கார் சமாச்சார்) விளம்பரம் செய்து விண்ணப்பங்கள் வரவழைக்கின்றன.

விண்ணப்பத்தில், பதவிப்பெயர், வயதுவரம்பு, தகுதிகள், முன் அனுபவம் முதலிய தகவல்கள் தரவேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைத்ததும் அவர்றை ஆய்வுசெய்து,விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டால் அதன் பிறகு தகுதி முறைமைப்படி பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

இந்தப் பட்டியலின்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்களின் பொதுஅறிவு, தகுதி மற்றும் நடைமுறைத்திறன் முதலியன கவனிக்கப்படுகின்றன.

எந்த விண்ணப்பதாரர் தன்னம்பிக்கையுடன் சரியான பதில் கூறுகிறாரோ, அவர் தான் தேர்ந்தப்படுகிறார்.

மனோகர் சிற்றப்பா கூறிய விஷயங்களைப் புரிந்துக் கொண்டான்.

நான் போட்டித் தேர்வுகளுக்கு நன்றாக ஆயத்தம் செய்வேன்.

மறுநாள் தில்லி திரும்பும் போது சிற்றப்பா கூறினார், மகனே, தினசரி செய்தித்தாள்கள் தவிர வேலைவாய்ப்புச் செய்தி (ரோஜ்கார் சமாச்சார்) தவறாமல் பார்த்துக் கொண்டிரு.

இவற்றில் மத்தியப் பொதுப்பணியாளர் தேர்வு ஆணையம், பணியாளர் தேர்வு ஆணையமும், ஆள்சேர்ப்பு வாரியம், வங்கித்துறை பணித்தேர்வு வாரியம், குழுமங்கள்,தொழிலகங்கள் மற்றும் சார்பு நிறுவனங்கள் முதலியவற்றில் பணிகள் தொடர்பான விளம்பரங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

உனக்கு பொருத்தமான வேலை ஏதும் வந்தால் நானும் உனக்கு உடனே தெரிவிப்பேன்.

No comments:

Post a Comment